Posts

மதிக விழா! பினாங்கு துணை முதல்வர் மற்றும் டத்தோஸ்ரீ ஆர்.கே பங்கேற்பு!

Image
பினாங்கு மாநில மலேசியத் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2020, 16.2.2020 (ஞாயிற்றுக்கிழமை) டேவான் ஸ்ரீ மாரியம்மன், ஜாலான் மெங்குவான் பட்டர் வொர்த்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, பொன்மனச்செம்மல் டத்தோஸ்ரீ  ஆர்.கே உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்!

பொங்கல் கலை இரவு 2020

Image
பினாங்கு சுங்கை பாக்காப் தாமான் செருலிங் எமாஸ் இந்தியர் குடியிருப்போர் சங்கத்தின்  பொங்கல் கலை இரவு 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று 15.2.2020 (சனிக்கிழமை)  பஞ்சூர் நிபோங் திபால், ஜாலான் புக்கிட் ஆறுமுகம் பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. பொன்மனச் செம்மல், டத்தோஸ்ரீ ஆர்.கே இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!

பல்கலைக்கழக நிகழ்வு.... காசோலை வழங்கினார் டத்தோஸ்ரீ ஆர்.கே!

Image
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 'கவிபாடும் தென்றல்' நிகழ்வுக்காக பொன்மனச் செம்மல் டத்தோஸ்ரீ ஆர்.கே-யிடம் இருந்து காசோலை பெறுகிறார் மாணவி தர்ஷினி சண்முகநாதன்!

யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பொங்கல் விழா!

Image
பினாங்கு சுங்கை பாக்காப் தாமான் செருலிங் எமாஸ் இந்தியர் குடியிருப்போர் சங்கத்தின்  பொங்கல் கலை இரவு 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று 15.2.2020 (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில், பஞ்சூர் நிபோங் திபால், ஜாலான் புக்கிட் ஆறுமுகம் பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பொன்மனச் செம்மல், டத்தோஸ்ரீ ஆர்.கே கலந்துகொள்கிறார்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!

Image
பினாங்கு மாநில மதிக சார்பில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2020, 16.2.2020 (ஞாயிற்றுக்கிழமை) டேவான் ஸ்ரீ மாரியம்மன், ஜாலான் மெங்குவான் பட்டர் வொர்த் என்ற முகவரியில் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, பொன்மனச்செம்மல் டத்தோஸ்ரீ செவாலியர் சர் டாக்டர் ஆர்.கே உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்!

ஆனந்தப் பொங்கல் விழா!

Image
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மாநில அளவிலான  ஆனந்தப் பொங்கல் விழா கொண்டாட்டம்,  பல்வேறு சமூக அமைப்புகளுடன்  தமிழர் பாரம்பரிய விழாவாக  களைகட்டியது அண்மையில். இசைக்கச்சேரி, நாதஸ்வரப் போட்டி, பொங்கல் வைத்தல்,  உறியடித்தல், மாட்டுவண்டி ஊர்வலம் எனப் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுப்  போட்டிகள்   இதில் இடம்பெற்றன. பினாங்கு மாக்மண்டின் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில்,  பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  தலைவரும்,  மாநிலத்தின் துணை முதல் அமைச்சருமான  பேராசிரியர் ராமசாமி தலைமையேற்றார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  டத்தோஸ்ரீ, செவாலியர், சர், டாக்டர்  ஆர்.கே.   உட்பட ,  பலர் கலந்து சிறப்பித்தனர்!

தமிழ்ப்பள்ளிக்காக 3 ஏக்கர் நிலம்! தானமாக வழங்கிய டத்தோஸ்ரீ ஆர்.கே!

Image
சுங்கை சுமுன் 17-வது மைல் தெலுக் பாரு தமிழ்ப்பள்ளியின் ஐசிடி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் ஆய்வகத்தை பேரா ஆட்சிக்குழு உறுப்பினரும்  சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் திறந்து வைத்தார். அவருடன் இப்பள்ளியின் அறவாரியக் குழுவின் தலைவரும், சமூகச் சேவையாளருமான டத்தோஸ்ரீ செவாலியர் டாக்டர் ஆர்.கே.  கலந்து சிறப்பித்தார். இப்பள்ளியை ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டத்தோஸ்ரீ ஆர்.கே, இப்பள்ளி மேம்பாட்டிற்காக 3 ஏக்கர் நிலத்தையும் தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கல்வியின் அவசியத்தை தாம் உணர்ந்த காரணத்தாலும், தான் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக் கூடாது என்பதாலும், சகல வசதிகளோடு ஒரு ஹைடெக் பள்ளியை உருவாக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என டத்தோஸ்ரீ ஆர்.கே. தெரிவித்தார்!