தமிழ்ப்பள்ளிக்காக 3 ஏக்கர் நிலம்! தானமாக வழங்கிய டத்தோஸ்ரீ ஆர்.கே!


சுங்கை சுமுன் 17-வது மைல் தெலுக் பாரு தமிழ்ப்பள்ளியின் ஐசிடி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் ஆய்வகத்தை பேரா ஆட்சிக்குழு உறுப்பினரும்  சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் திறந்து வைத்தார்.





அவருடன் இப்பள்ளியின் அறவாரியக் குழுவின் தலைவரும், சமூகச் சேவையாளருமான டத்தோஸ்ரீ செவாலியர் டாக்டர் ஆர்.கே.  கலந்து சிறப்பித்தார்.

இப்பள்ளியை ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டத்தோஸ்ரீ ஆர்.கே, இப்பள்ளி மேம்பாட்டிற்காக 3 ஏக்கர் நிலத்தையும் தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கல்வியின் அவசியத்தை தாம் உணர்ந்த காரணத்தாலும், தான் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக் கூடாது என்பதாலும், சகல வசதிகளோடு ஒரு ஹைடெக் பள்ளியை உருவாக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என டத்தோஸ்ரீ ஆர்.கே. தெரிவித்தார்!

Comments

Popular posts from this blog

மாணவன் சென்று வர பேருந்து கட்டண உதவி!

சேவையின் நாயகன்!

பினாங்கு மதிக பொங்கல் விழா!